இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் தற்சமயம் சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.
முன்னதாக அவர், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதிவரை இந்திய வெளிவிவகார அமைச்சரின், இலங்கை விஜயம் அமைந்துள்ளதுடன், நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.