ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இன்று(28) தீர்மானம் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சர் அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ரயில் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயதேவை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.