Date:

ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது: ஜோ பைடன்

ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் கூறுகையில், ‘ஆஃப்கானிஸ்தானில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க இராணுவம் அங்கு செல்லவில்லை.

அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்கவேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை.

தலிபான்களை நம்பவில்லை என்றபோதும், ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே, ஆப்கானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை வரும் ஒகஸ்ட் 31ஆம் திகதியுடன் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும்’ என கூறினார்.

அமெரிக்காவில் ‘செப்டம்பர் 11’ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயற்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.

ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் கொய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் இயக்கத்தினர் அளித்த உறுதிமொழயின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.

ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இதனால், தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கான் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

எனினும், ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

Breaking இரவில் திறக்கப்பட்ட வான்கதவு : மக்களுக்கு எச்சரிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை...

பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன: நீர்மட்டம் குறித்து எச்சரிக்கை

பெய்து வரும் மழையுடன் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே...