தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி ஒரு கிலோ கிராம் 300 ரூபாவாக அதிகரிக்குமென ஐக்கிய அரிசி உற்பத்தியாளார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் அரிசி கொள்வனவுக்காக வரிசையில் காத்திருக்கும் அபாயம் காணப்படுவதாகவும் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரிசி உற்பத்தியாளார்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.