அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது அமைச்சு பதவிகளை துறப்பதற்கு முன்வந்தால் தானும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரும்பினால் அது தனது அமைச்சர்களை இராஜினாமா செய்யுமாறுகேட்டுக்கொள்ளலாம் அந்த கட்சி அவ்வாறு முன்மாதிரியாக நடந்துகொண்டால் நானும் முன்மாதிரியா நடந்துகொள்வேன் பதவியைஇராஜினாமா செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்டதால் ஏனைய எதிர்கட்சிகள் சர்வகட்சி கூட்டத்தை புறக்கணித்திருக்கலாம் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.