அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த மேலுமொரு சந்தேகநபர் கல்கிசை வலய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய நபரொருவரே, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
சி.சி.ரி.வி. காட்சிகளினூடாக பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
கொலை நடந்த தினத்தன்று அவர் பயணித்த மோட்டா்ா சைக்கிளும் பொலிஸாாினால் கைபற்றப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி மாவித்தர பிரதேசத்தில், அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருந்ததுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இதற்கு முன்னர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.