37, 500 மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (28) நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன் மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளது.
இதுதவிர கடந்த வெள்ளிக்கிழமை 40, 000 மெட்ரிக் டன் எரிபொருளுடன் நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டமையை அடுத்து குறித்த எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
எவ்வாறாயினும் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்களின் வரிசையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு சென்ற மக்களுக்கு போதுமான எரிவாயு கிடைக்காமையின் காரணமாக எரிவாயுவுக்கான வரிசை தொடர்கின்றது.
லிட்ரோ நிறுவனத்தினால் நாளாந்தம் சுமார் 120, 000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.