நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் மனோஜ் குப்தா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 15 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 65 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் லங்கா ஐஓசி நிறுவனம் பெற்றோல்களுக்கு 49 ரூபா விலை அதிகரிப்பினை அறிவித்திருந்தது.
இந்நிலையில் லங்கா ஐஓசி நிறுவன முகாமையாளர் வெளியிட்ட கருத்திற்கமைய நட்டத்தினை ஈடு செய்வதற்காக மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.