வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ்டெகின் உச்சி மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறுகிறது.
கொழும்பில் எதிர்வரும் 28 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்கான பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல் (Tenzin Lekphel) இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.