நேற்று பிற்பகல் கடலில் நீராடிக் கொண்டிருந்த நானுஒயா கிளாரண்டன், ஏவோக்கா பிரதேசத்திலிருந்து சுற்றுலா சென்ற குழுவினரில் கிளாரண்டன் பிரதேசத்தை சேர்ந்த மருதை ராமசாமி 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் ,ஐயாகண்ணு விஸ்வநாதன் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர் எனவும் .மேலும் இச் சம்பவத்தில் ஏவோக்கா பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சையை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்
சடலங்கள் வென்னப்புவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.