Date:

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

எமது நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு இந்த அறிக்கையில் உள்ளடங்குகிறது.

அந்த அறிக்கையில், கொவிட்-19 இலங்கயைின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை இழப்பு மற்றும் பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டன.

கொவிட்-19 இன் தாக்கம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் (IMF), இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயங்களை உடன் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் சமூக பாதுகாப்பை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...