நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழொன்று தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையினை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
பத்திரிகைகளை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பத்திரிகை நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை முதல் மறுஅறிவித்தல் வரை இவ்வாறு தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து இணையத் தளம் ஊடாக தமது பத்திரிகையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.