Date:

சதொச விற்பனையகத்தில் நுகர்வோருக்கு 1 கிலோ சீனி, 500 கிராம் பருப்பை வழங்குமாறு அறிவுறுத்தல்

வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கூட்டுறவு மொத்த விற்பனை(சதொச) கிளை முகாமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஐந்து கிலோ நாட்டரிசி கிலோ ஒன்று 110 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா கிலோ 130 ரூபாவுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 160 ரூபாவுக் கும் பருப்பு கிலோ 360 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

நுகர்வோருக்கு ஒரு கிலோ சீனி மற்றும் 500 கிராம் சிவப்பு பருப்பை வழங்குமாறு நிர்வாகம் அறிவு றுத்தியுள்ளது.

இதேவேளை சதொச கிளைகளில் கோதுமை மா உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவிலிருந்து கால்நடையாக வெளியேறும் மக்கள்

காசா நகருக்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரத்தில்...

பலஸ்தீன் – காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலா ஓதிவருமாறு கோரிக்கை

பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும்...

மித்தெனிய இரசாயனங்கள் – அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வௌியானது

மித்தேனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின்...

காஸாவுக்கு ஆதரவாக மொரோக்கோ செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காஸாவுடனான ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்கிழமை...