தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் பாடசாலை மாணவர்கள், அரச தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நுவரெலியாவில் இருந்து கந்தபளை , பொரலாந்த நானுஒயா,மார்காஸ் தோட்டம் , மீபிலிமான போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .
தமக்கு போதிய அளவு டீசல் கிடைக்காத நிலையில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில் பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் நுவரெலியா அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செ.திவாகரன்