Date:

ஜனாதிபதியுடனான சந்திப்பில் 4 விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டது-தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு 3 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமான இந்த சந்திப்பு பிற்பகல் 1.30 அளவில் நிறைவடைந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஷ் நிர்மலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் தவராசா கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அதில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் குறித்த சந்திப்பை புறக்கணித்திருந்தது.

அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலிசப்ரி மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னர் உடனடியாக நிறைவேற்ற கூடிய 4 விடயங்கள் தொடர்பில் இன்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது மற்றும் காணி பிரச்சினை உள்ளிட்ட 4 விடயங்கள் தொடர்பில் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...