2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகளை நாடாத்துவதற்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி உள்ளூர் மற்றும் இந்திய நடனங்கள், கீழைத்தேய, கர்நாடகம் மற்றும் மேலைத்தேய சங்கீதம் ஆகியவற்றுக்கான செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த பரீட்சைகளை மார்ச் 29 ஆம் திகதி முதல்ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D Dharmasena தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.