உணவுப் பொதியின் விலை அதிகரித்ததை அடுத்து, சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், உணவுப் பொதியின் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வடை, தேநீர் ஆகியன சிற்றுணவகங்களின் பிரதான விற்பனை பொருட்களாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.