அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிலர் இன்றைய நாளில், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்தனர்.
அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசாங்கத்துக்கு இருக்கின்ற பெரும்பான்மையை தாங்கள் வெகுவிரைவில் இல்லாது செய்வதாக குறிப்பிட்டார்.
எந்தவொரு ராஜபக்ஷவும் இந்த நாட்டில் மீள ஆட்சிக்கு வருவதற்கு தாங்கள் ஆதரவாக செயற்படப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.