Date:

பாடசாலை கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருட்டு

யாழ்ப்பாணம் – அச்சுவேலி மத்திய கல்லூரியில் உள்ள கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட மின் வெட்டினை வாய்ப்பாகப் பயன்படுத்தி பாடசாலையின் கதவு, ஜன்னல் உடைக்கப்பட்டு கணினி உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

பாடசாலையின் கண்காணிப்பு கமரா மின் துண்டிப்பினால் இயங்காதிருந்த நேரம் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இனந்தெரியாதோர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த கோவிட் காலத்தின் போதும் பாடசாலையில் தங்கியிருந்து சிலர் அங்குள்ள பொருட்களைச் சூறையாடிச் சென்றனர்.

இருப்பினும் அது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் நேற்று மாலை குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

திருட்டு இடம்பெற்ற பாடசாலையின் வளாகத்தினுள் பொலிஸாரின் மோப்ப நாய் மற்றும் தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர் தடயங்களைச் சேகரித்தனர்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது. 4 மீட்டருக்கு...

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...