Date:

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று விழிப்புணர்வு நிகழ்வு

இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமானது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

“அனைவருக்கும் இனிமையான பயணம்” எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பேரூந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் மகளிர் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தற்போதைய தேசிய பெண்கள் குழு உறுப்பினருமான இமெல்டா சுகுமார், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மத்திய பேருந்து நிலைய முகாமையாளர், மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக்...

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...