Date:

விறகு வெட்டச் சென்றவர் சடலமாக மீட்பு

கிண்ணியாவில் இருந்து நேற்று விறகு வெட்டுவதற்காகத் திருகோணமலை முத்துநகர் பிரதேசத்திற்குச் சென்ற நபர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ரஹ்மானியா நகர், கிண்ணியா – 01 ஐ சேர்ந்த அப்துல் கபூர் (வயது-65) எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கிண்ணியா பிரதேசத்திலிருந்து நேற்று காலை விறகு வெட்டுவதற்காக முத்துநகர் பிரதேசத்திற்குச் செல்வதாக குடும்பத்தினருக்குத் தெரிவித்து விட்டுச் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று இரவு வரை வீடு திரும்பாமையால் குடும்பத்தினர் குறித்த நபரை தேடி வந்த சந்தர்ப்பத்தில் இன்று அதிகாலை முத்துநகர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய 3...

அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார...

இந்தியா – பாக். ‘சூப்பர் 4’ ஆட்டம்: மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா -...

47 இஸ்ரேல் பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 47 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் புகைப்படங்களை...