எம்.சி.சி. உடன்படிக்கையை செயற்படுத்திக்கொள்வதற்காகவே அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வந்துள்ளனர். இதன் பின்னணியில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச செயற்படுகின்றார்.”என தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற அரசியல் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நல்லாட்சியின்போது எம்.சி.சி. உடன்படிக்கையைச் செயற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சித்தது. அதற்கு நாம் இடமளிக்கவில்லை. இந்நிலையில், புதிய கோணத்தில் அந்த உடன்படிக்கையைச் செயற்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்க இராஜதந்திரிகள் இங்கு வருகின்றனர்.
இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்தால் திட்டத்தை இலகுவில் நிறைவேற்றிவிடலாம் என்பதால்தான், அதற்கான சூழ்நிலையை நிதி அமைச்சர் ஏற்படுத்திக்கொடுக்கின்றார் .
தேசப்பற்றாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை ‘அசிங்கமான’ அமெரிக்கர் சீரழிக்கின்றனர்” – என்றார்