இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடானது நாடு முழுவதும் மரக்கறிகளை விற்பனை செய்ய கொண்டு செல்லும் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இந்த நாட்களில் மரக்கறிகளின் கையிருப்பு கிடைத்தாலும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை இந்த நாட்களில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
வழமையான வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரான டி.என். சில்வா தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்களுக்கு டீசல் கிடைக்காமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.