மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.