Date:

தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதற்கு பொறுப்பு அரசாங்கமே!

மருந்து தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என தனியார் வைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக மின்சாரம் மற்றும் அவசியமான எரிபொருள் என்பவற்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரப்பட்ட போதிலும் அது இதுவரையில் இடம்பெறவில்லை என அந்த சம்மேளனத்தின் தலைவர் ஆனந்த குருப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்திக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அவசர சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளிகளுக்கு பொறுத்தமான சிகிச்சைகள் வழங்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

எனினும் அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தனியார் வைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்த குருப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...