Date:

விவசாயம் மீதான கட்டுப்பாடுகளால் இலங்கை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

2021ஆம் ஆண்டு இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, விளைச்சல் குறைந்து, பயிரின் தரம் குறைவது குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்பாட்டினால்  விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தமது நகைகள் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து பயிர்ச்செய்கைக்காக பணம் திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும். பயிர்ச்செய்கை எதிர்பார்த்தளவுக்கு இலாபகரமானதாக அமையவில்லை எனவும் ஹிங்குராங்கொட பிரதேச விவசாயி கேஷர விதானகே விசனம் தெரிவித்துள்ளார்.

‘நாங்கள் சுமார் 200 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம் உங்களுக்கு இது போன்ற தரத்தில் குறைந்த நெல் கிடைத்தது தங்க நகைகள் மற்றும் உழவு இயந்திரங்களை அடகு வைத்தே இந்த அறுவடைக்கு தேவையான பணத்தை திரட்டினோம். கரிம உரம் மற்றும் நானோ நைட்ரஜனைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய அறுவடை பெறப்பட்டது. என விவசாயி  கருத்து தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக விளைச்சல் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க தலைவர் சம்பத் அபேசுந்தர தெரிவித்தார்.

” குறைந்த வருமானம் பெறும் விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த ஆசைப்படுகின்றனர், இதனால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்.விவசாயத்தை பாதுகாக்கவும். எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படாமல் தடுக்கவும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.’எங்களுக்கு மிகவும் மோசமான அறுவடை இருந்தது. இனி விவசாயம் செய்வதா அல்லது விவசாயத்தை கைவிடுவதா என்பதை அதரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் விளைச்சல் குறைவடைந்ததாகும் சுமார் 180 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம்.இந்தப் பயிரை அறுவடை செய்வதற்குத் தேவையான பணத்தைக் தேடிக்கொள்வதற்னு சிக்கலாக உள்ளது” என தொழிற்சங்கத் தலைவர் சம்பத் அபேசுந்தர தெரிவித்தார்.

இந்த நாட்டில் எந்த பகுதியாக இருந்தாலும் விவாசாய துறை பாரிய சிக்கல் நிலையில் உள்ளது. இந்த நெருக்கடியால் தேயிலை, தென்னை, ரப்பர் உள்ளிட்ட அனைத்து விவாசாய பயிர்ச்சேகைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். இரசாயன உரத்தைப்பயன் படுத்துங்கள் அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பிட்டை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிகளை இப்போதே நிறைவேற்றுங்கள்’ என தொழிற்சங்க  உறுப்பினர்.    ருவான் அபேநாயக்க தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச்...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...