கண்டியில் மண்ணெண்ணெய்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கண்டி – உடதலவின்ன – வத்தேகம பகுதியைச் சேர்ந்த 70 வயதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் மயங்கி விழுந்த வேளையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.