நேற்று மாலை மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
வீட்டில் வளர்த்து வந்த 5 அடி உயரமன கஞ்சா செடியை மீட்டதுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.