நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி முடியும் வரை, அரச ஊழியர்கள் தாமதமாக வருவதற்கு சலுகை அல்லது முன்னர் பயன்பாட்டிலிருந்த வருகை பதிவு ஆவண முறையை பயன்படுத்துமாறு அரசாங்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், உரிய நேரத்திற்கு பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே கைரேகை பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது, தாமதமாக வருபவர்களுக்கு சலுகை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே.திலகரத்ன தெரிவித்துள்ளார்.