கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இந்த நிலையில், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்ற நிலையில், அந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்க இருந்தார்.
இந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையால், அவர் அந்த நிகழ்வுகளில் பங்கேற்கமாட்டார்