Date:

பியகமை ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு அனுசரணை வழங்கிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCEஇன் அனுசரணையுடன் சமூக பொலிஸ் பிரிவு மற்றும் பியகம பொலிஸ் பிரிவு ஆகியன இணைந்து சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் திகதி பியகம ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள DPL நிறுவன வளாகத்தில் வெற்றிகரமாக கொண்டாடியது.

சமூக பொலிஸ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பியகம ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்திலுள்ள தொழிற்சாலைகளின் 350 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு மகளிர் தினமானது பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பின் சட்டப் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்விற்கு மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர நடாத்தியதுடன், பணிபுரியும் சூழலிலும் அதற்கு அப்பாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு எதிராக அவர்களுக்கு எவ்வாறு சட்டப் பாதுகாப்பு வழங்குவது, அவர்கள் மீது என்ன சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பங்குகொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. HNB FINANCE ஆல் அனுசரணை வழங்கப்பட்ட இந்த நிகழ்விற்கு பங்குபற்றியவர்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தின நிகழ்விற்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த HNB FINANCE PLCஇன் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “சட்ட விதிகளை அறிந்துகொள்வதன் மூலம் பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களை சமாளிக்க முடியும். HNB FINANCE பெண்களின் நிதி மற்றும் சமூக ரீதியில் அதிகாரமளித்ததை பாராட்டுகிறது, மேலும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த அனைத்து வழிகளிலும் செயல்படும் ஒரு நிறுவனமாக உள்ளதுடன் இதுபோன்ற CSR திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம் பெண்கள் சமூகத்தை மேம்படுத்தும் HNB FINANCE இன் சமூகப் பொறுப்பை தொடர்ந்து நிறைவேற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம்.” என தெரிவித்தார்.

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளும், HNB FINANCE PLC மற்றும் கடுவெல கிளையின் தலைமை அலுவலக அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

HNB Finance தொடர்பில்

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 70 கிளைகளைக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373