சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னரும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக இரண்டு தடவைகள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.