இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் தாங்கி ஊர்திகளுக்கான எரிபொருள் இன்மையால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அகில இலங்கை கனியவள தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இலங்கை கனியவள மொத்த களஞ்சிய முனையத்திற்கு அறியப்படுத்தி உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கான முறைமையை, இன்று பிற்பகலுக்குள் தயாரித்து தருவதாக, களஞ்சிய முனையத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அனைத்து கொள்கலன் தாங்கி ஊர்திகளும், எரிபொருளைக் கொண்டு செல்லுவதற்கு தயாராக உள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.