Date:

உறங்கிய பொலிஸ் அதிகாரி; மீண்டும் வௌியில் வராத நிலையில் மரணம்

இன்று மாலை வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.

நேற்று இரவு தனது அறையில் உறங்கியவர் மீண்டும் வௌியில் வராத நிலையில் அவரது பிள்ளைகள் மதியம் கதவை உடைத்தபோது அவர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவர் பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியில் வசித்து வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான 60 வயதுடைய முஹம்மது முஸ்தபா செய்யது ஹமீட் என்பவரே மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவசர சேவை பிரிவின் வாகன உதவியுடன் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...