Date:

தேவைக்கு அதிகமாக எரிபொருள் பெற்றுக்கொள்வதே பற்றாக்குறைக்கு காரணம்- சுமித் விஜேசிங்க

25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

114,000 மெட்ரிக் டன் டீசலும், 60, 000 மெட்ரிக் டன் பெட்ரோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 40,000 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதியில் நாட்டை வந்தடையவுள்ளது.

மேலதிக டீசல் ஏப்ரல் மாதம் முதல் வார காலப்பகுதியில் கிடைக்கப்பெறும். எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு, சந்தர்ப்பம் இல்லை.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பிரவேசிப்பவர்கள் முன்னர் தாம் பெற்றுக்கொண்ட அளவினை காட்டிலும், தற்போது அதிகளவில் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....