வெலிகம பிரதேசத்தில் உள்ள இரும்பு பட்டறைக்குள் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரும்பு பட்டறையின் உரிமையாளரே, அங்கு பணியாற்றிய ஊழியரால் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பண்டாரவத்தை, தெனிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான மஞ்சுள பிரபாத் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.