அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த வரிசையில் நின்றபடி கலந்துகொண்டுள்ளார்.
இன்று இணையவழியில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர், 2 சிலிண்டர்களின் மேல் தனது மடிக்கணினியை வைத்து பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி குறித்த சந்திப்பில் இணைந்திருந்தார்.
இதன்போது, தற்போது நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்த ஊடகவியலாளர், அரசாங்கம் எதிர்காலத் திட்டத்தை வகுக்கவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து குறித்த செய்தியாளருக்குப் பதிலளித்த இணை அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பல அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ள எந்த அரசாங்கமும் விரும்பவில்லை.
மேலும், எந்த அரசும் தனது ஆட்சிக் காலத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அவதிப்படுவதைப் பார்க்க விரும்பவில்லை என்றார்.