ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் அண்மைக்காலமாக நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், ”முழு நாடும் அழிவில், பொறுத்தது போதும், ஒன்றாய் அணித்திரளுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.