இன்று காலை மொனராகலை – எத்திமலை மகா வித்தியாலயத்தின் 62 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் குளவி கூடு ஒன்று சரிந்து விழுந்ததில், குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் எத்திமலை கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் பாடசாலையின் அதிபரும் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.