அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பராக் ஒபாமா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு இரண்டு நாட்களாக தொண்டையில் அரிப்பு இருந்தது, ஆனால் நலமாக இருந்தேன். மிச்சேலும் நானும் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு இருக்கிறோம். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. தொற்றுகள் குறைந்தாலும் கூட, தீவிரமான அறிகுறிகளைத் தடுக்கவும் மற்றவர்களுக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்துவதை தடுக்கவும், நீங்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உலகத்தலைவர்கள் பராக் ஒபாமா விரைவில் குணமடைய அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.