இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் மருந்துகள்,எரிபொருள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு பற்றாக்குறை நிலவுகின்றது என பிரிட்டன் தனது நாட்டிலிருந்து இலங்கை செல்லவிரும்பும் பயணிகளிற்கு எச்சரித்துள்ளது.
இறக்குமதிகளிற்கான அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இலங்கை அடிப்படை பொருட்களிற்கான தட்டுப்பாட்டினை எதிர்கொள்கின்றது,கடைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மருந்தகங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கலாம்,என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
மின்வெட்டுக்கான சாத்தியங்கள் உள்ளது எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
டெங்கு கொரோனா வைரஸ் குறித்தும் பிரிட்டன் எச்சரித்துள்ளது.