எரிபொருள் நெருக்கடி காரணமாக முழு நாடும் செயலிழந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துல தெரிவித்துள்ளார்.
மக்கள் தமக்கான ஒரு வேளை உணவை தேடிக்கொள்வதிலும் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். முழு நாடும் செயலிழந்துள்ளது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்படுவதால் மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் இலங்கையில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.டீசல் விலை அதிகரிக்கப்பட்டமையால், அனைத்து பொருட்களின் விலைகளும் இரண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
காய்கறிகள் இலங்கையில் டீசல் வாகனங்களில் எடுத்துச் சென்றே விநியோகிக்கப்படுகின்றன. மீன் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் நாம் எண்ணிப் பார்க்காத அளவுக்கு அதிகரிக்கும்.
நாட்டில் தற்போது காணப்படும் உணவு வீக்கம் மேலும் அதிகரித்து மக்களுக்கு மூன்று வேளை அல்ல ஒரு வேளை கூட சாப்பிட முடியாமல் போகும் எனவும் அலவத்துவல கூறியுள்ளார்.