அரநாயக்க – உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தில் மாஓயா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
19 வயதான இவர் உடுவெவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.
மதுபோதையில் குளித்த போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், காணாமல்போன நபரை தேடும் பணிகளை பொலிசார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.