இலங்கைக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.
பெட்டிகளை ஒன்றோடொன்று இணைக்கும் பகுதியில் காணப்பட்ட கோளாறு காரணமாக கடந்த 04ஆம் திகதிமுதல் குறித்த ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைக்கும் செயற்பாடுகள் கைவிடப்பட்டுள்ளதாக Locomotive operator பொறியிலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
ரயில் பயணிகள் மற்றும் ரயில் போக்குவரத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பில் ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்னவிடம் வினவியபோது, சாரதிகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் சங்கங்கள் என்பன குறித்த ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பிலான அறிக்கை பொறியியலாளர்கள் சங்கத்தினால் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லையென ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.