Date:

“சீன கம்யூனிஸ்ட் கட்சி” எழுத்துடன் இலங்கையின் புதிய நாணயம்

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கின் முன் பக்கத் தோற்றமானது, நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது. கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் “இலங்கை – சீனா 65 ஆண்டுகள்” என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் “சீன கம்யூனிஸ்ட் கட்சி” என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...