“பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கருத்துகளை செவிமடுத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அவை அடிப்படையற்றவை. உரிய வகையில் உரையாற்றுவதற்கே சட்டத்தரணிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். ஆனால் அதற்கு புறம்பாகவே பாராளுமன்ற பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றது. விடயதானத்துக்கு அப்பால் சென்றே உரையாற்றுகின்றனர்.”என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனக்கு இருப்பதற்கு விருப்பமற்ற ஓர் இடமே பாராளுமன்றம் என்று கூறியே இக்காரணத்தை விளக்கியுள்ளார்.
சிறைக்கைதிகளால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு நூல் நேற்று வெளியிட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நீதியமைச்சர் தனது அதங்கத்தை வெளிப்படுத்தினார்.