ஹங்வெல்ல, துன்னான பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஹோமாகம பகுதியைச் சேர்ந்த “மன்ன மலிந்த”வின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.
மற்றைய நபர் பன்னிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.அத்தோடு, கைது செய்யப்பட்ட பெண் 24 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவர்களிடம் இருந்து 6 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.