அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்கி இலங்கை பெண்ணும் அவரது மகனும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஹேமலதாசோல்ஹிர் (67) மற்றும் அவரது மகன் பிரமுத் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்கு சிட்னியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தாய் மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஹேமலதாசோல்ஹிர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட பெண் எனவும் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூக வானொலியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களது கார் முதலில் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது, பின்னர் மேலதிக விசாரணைகளின் போது இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கால்வாயில் கார் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் அவர்களது உடல்கள் சிக்கியிருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.