Date:

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் வரையில் அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி கொண்டுவரப்பட உள்ளது-காமினி லொக்குகே

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி உரியவாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதென வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் ஊடாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் வரையில் அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி, மேலும் 5 கப்பல்களின் மூலம் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் நேற்றைய தினம் நாடாளுமன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L  வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்,  இரண்டரை மணிநேரம் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதேநேரம், P முதல் W வரையான வலயங்களில், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...