Date:

சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை,21 பேர் கைது

சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்ட 1,100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த விசாரணை பிரிவினால் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பணமோசடி சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சொத்துகள் மற்றும் நிதி உள்ளிட்ட துறைகளில் விசாரணைகளை மேற்கொண்டு சிறந்த அனுபவமிக்க அதிகாரிகளுடன் இந்த விசாரணை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு பெறப்படுகின்ற பணத்தின் ஊடாக ஈட்டப்படும் சொத்துக்களுக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரையில் 1,100 பேர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவற்றில் 325 பேர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...